ADDED : ஜன 17, 2026 01:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பொங்கல் கொண்டாட, சொந்த ஊருக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக, நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில், நாகர்கோவிலில் இருந்து நாளை மாலை, 5:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 4:10 மணியளவில் சென்னை தாம்பரம் வந்தடையும். வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
முன்பதிவு இன்று காலை, 8:00 மணிக்கு துவங்குகிறது.

