தாம்பரம் - கொச்சுவேலிக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்
தாம்பரம் - கொச்சுவேலிக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்
ADDED : ஜன 18, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பயணியர் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, தாம்பரத்தில் இருந்து கேரளா மாநிலம் கொச்சுவேலிக்கு இன்று, சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாகர்கோவிலில் இருந்து நேற்று மாலை 4:30 மணிக்கு புறப்பட்ட சிறப்பு ரயில், இன்று காலை 4:10 மணிக்கு, தாம்பரம் வரும். இதேபோல், தாம்பரத்தில் இருந்து இன்று காலை 8:05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், இதேநாளில் இரவு 10:00 மணிக்கு, கொச்சுவேலி செல்லும்.
இந்த சிறப்பு ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக இயக்கப்படும். டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.