ADDED : அக் 25, 2024 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வோர் வசதிக்காக, சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல, 10க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. அந்த ரயில்களுக்கான முன்பதிவு, துவங்கிய சில நிமிடங்களில் முடிந்தது.
இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது: தென் மாவட்டங்களுக்கான பயணியர் எண்ணிக்கை தான் அதிகம். ஆனால், போதிய அளவில் ரயில்கள் இல்லை. எனவே, சென்னையில் இருந்து திருநெல்வேலி, துாத்துக்குடி போன்ற வழித்தடங்களில், முன்பதிவு இல்லாத அந்த்யோதயா ரயில்களை இயக்கினால், ஒரே நேரத்தில் அதிகம் பேர் பயணம் செய்ய முடியும். கட்டணமும் அரசு பஸ்சை விட குறைவு என்பதால் மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

