ADDED : ஜன 20, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தைபூசத் திருவிழாவையொட்டி மதுரை - பழநி இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மதுரையில் இருந்து ஜன.24, 25ம் தேதிகளில் காலை 6:00 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் அதே நாளில் காலை 8:30 மணிக்கு பழநிக்கு செல்லும்
பழநியில் இருந்து ஜன.24, 25ம் தேதிகளில் மாலை 5:45 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், அதே நாளில் இரவு 8:15 மணிக்கு மதுரை வரும். இந்த ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.