கொல்லத்தில் இருந்து ஹூப்ளி பெலகாவிக்கு சிறப்பு ரயில்கள்
கொல்லத்தில் இருந்து ஹூப்ளி பெலகாவிக்கு சிறப்பு ரயில்கள்
ADDED : நவ 29, 2024 01:53 AM
விருதுநகர்:சபரிமலை பக்தர்களுக்காக கொல்லத்தில் இருந்து ஹூப்ளி, பெலகாவி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் இருந்து சபரிமலை சென்று வரும் பக்தர்களின் வசதிக்காக ஹூப்ளியில் இருந்து (07313) சிறப்பு ரயில் டிச. 5 முதல் 2025 ஜன. 9 வரை வியாழக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் (07314) டிச. 6 முதல் 2025 ஜன. 10 வரை செல்கிறது.
ஹூப்ளியில் இருந்து மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4:30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கத்தில் வெள்ளிகிழமைகளில் மாலை 6:30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 7:35 மணிக்கு ஹூப்ளி செல்லும்.
ஹாவேரி, ராணிபென்னுார், ஹரிஹர், தாவணகரே, கடூர், அர்சிகெரே, தும்கூர், எஸ்.எம்.வி.டி., பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காரபேட், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், சங்கனாசேரி, திருவல்லா, செங்கனுார், மாவேலிக்கரை, காயங்குளம் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
பெலகாவியில் இருந்து (07317) சிறப்பு ரயில் டிச. 9 முதல் 2025 ஜன. 13 வரை திங்கள்கிழமைகளில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் (07318) டிச. 10 முதல் 2025 ஜன. 14 வரை செல்கிறது.
பெலகாவியில் இருந்து மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டுமறுநாள் மாலை 4:30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கத்தில் செவ்வாய் கிழமைகளில் மாலை 6:30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 10:00 மணிக்கு பெலகாவி செல்லும்.
கானாபூர், லோண்டா, தார்வாட், ஹூப்ளி, காவேரி, ராணிபென்னுார், ஹரிஹர், தாவணகரே, கடூர், அர்சிகெரே, தும்கூர், எஸ்.எம்.வி.டி., பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காரபேட், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், சங்கனாசேரி, செங்கனுார், மாவேலிக்கரை, காயங்குளம் ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு நடந்து வருகிறது.