தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சபரிமலை பக்தர்களுக்காக சேலம் வழியே சிறப்பு ரயில்கள்

சபரிமலை பக்தர்களுக்காக சேலம் வழியே சிறப்பு ரயில்கள்

சபரிமலை பக்தர்களுக்காக சேலம் வழியே சிறப்பு ரயில்கள்


UPDATED : நவ 17, 2026 06:22 PM

ADDED : நவ 17, 2026 06:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 06:22 PM ADDED : நவ 17, 2026 06:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சபரிமலை பக்தர்களுக்காக, சேலம் வழியே காக்கிநாடா மற்றும் மச்சிலிப்பட்டினத்தில் இருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காக்கிநாடா – கொல்லம் சிறப்பு வார ரயில், நவ., 19 முதல் ஜன., 21 வரை வியாழக்கிழமைகளில் காலை, 8:20 மணிக்கு காக்கிநாடா டவுனில் புறப்பட்டு, ராஜமுந்திரி, விஜயவாடா, தெனாலி, ஓங்கோல், நெல்லுார், கூடூர், ரேணிகுண்டா, குண்டூர், தர்மாவரம், பாகாலா, சித்துார், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம் வழியே வெள்ளிக்கிழமை இரவு, 9:30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் கொல்லம் – காக்கிநாடா சிறப்பு வார ரயில், நவ., 21 முதல் ஜன., 23 வரை சனிக்கிழமைகளில் அதிகாலை, 2:30 மணிக்கு கொல்லத்தில் புறப்பட்டு, சேலம் வழியே ஞாயிற்றுக்கிழமை மாலை, 6:30 மணிக்கு காக்கிநாடா சென்றடையும்.

மச்சிலிப்பட்டினம் – கொல்லம் சிறப்பு ரயில், நவ., 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மாலை, 4:30 மணிக்கு மச்சிலிப்பட்டினத்தில் புறப்பட்டு, சேலம் வழியே சனிக்கிழமை இரவு, 9:30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கத்தில் கொல்லம் – மச்சிலிப்பட்டினம் சிறப்பு ரயில், நவ. 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அதிகாலை, 2:30 மணிக்கு கொல்லத்தில் புறப்பட்டு சேலம் வழியே திங்கள்கிழமை காலை, 8:50 மணிக்கு மச்சிலிப்பட்டினம் வந்தடையும்.

பயணிகள் நெரிசலை குறைக்க போத்தனுார் – பரூனி ஒருவழி சிறப்பு ரயில், நவ., 18ம் தேதி காலை 6:15 மணிக்கு போத்தனுாரில் புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், விஜயவாடா, வாரங்கல், நாக்பூர், ஜபல்பூர் வழியே, 20ம் தேதி பிற்பகல் 1:30 மணிக்கு பரூனி சென்றடையும்.

இத்தகவலை சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us