ADDED : நவ 14, 2024 10:26 PM
சென்னை:தமிழகம் முழுதும், நாளை மற்றும் நாளை மறுதினம், வாக்காளர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, 5ம் தேதி, தேர்தல் கமிஷனால் வெளியிடப்படும். அதற்கு முன்னதாக, ஒரு மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கும்.
அதன்படி இம்மாதம் முழுதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்க உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம்.
இதற்காக நாளை மற்றும் நாளை மறுதினம், தமிழகத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடக்க உள்ளது. வாக்காளர்கள் அங்கு சென்று, பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம்.
இது தவிர, https://voters.eci.gov.in இணையதளத்திலும், VOTER HELP LINE என்ற மொபைல் போன் செயலி வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.