தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தமிழகத்திலிருந்து விலகியது 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனம்

 தமிழகத்திலிருந்து விலகியது 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனம்

 தமிழகத்திலிருந்து விலகியது 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனம்

1


ADDED : ஜூன் 30, 2026 03:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2026 03:48 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்ட விமான சேவைகளை, 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனம் முழுதுமாக நிறுத்தியுள்ளது.

சென்னை, மதுரை, கோவை விமான நிலையங்களில் இருந்து, உள்நாட்டு நகரங்களுக்கு தினசரி விமான சேவைகளை, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வழங்கி வந்தது.

இங்கிருந்து மும்பை, டில்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு தினசரி விமானங்களும் இயக்கப்பட்டு வந்தன.

இதற்கிடையே மதுரை மற்றும் கோவையில் இருந்து உள்நாட்டு நகரங்களுக்கான சேவைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு, முழுதுமாக நிறுத்தப்பட்டன.

பெயரளவிற்கு சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவுக்கு மட்டும், தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. அந்த சேவைகளையும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சமீபத்தில் நிறுத்தியுள்ளது.

தமிழகத்தில் இருந்து ஒரு விமானம் கூட இயக்காமல், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விலகி உள்ளது. குறிப்பாக, மதுரையில் இருந்து துபாய்க்கு இயக்கப்பட்ட விமானமும், நான்கு மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது.

விமான போக்குவரத்து வல்லுனர்கள் கூறியதாவது:

தமிழக விமான நிலையங்களில் இருந்து, சொற்ப அளவிலான விமான சேவைகளை மட்டுமே ஸ்பைஸ்ஜெட் வழங்கி வந்தது. பயணியர் ஆர்வம் காட்டியும், வழித்தடங்களை மேம்படுத்த, இந்நிறுவனம் ஆர்வம் காட்டவில்லை.

துபாய்க்கு நேரடியாக இயக்கிய விமானமும், போர் பதற்றம் காரணமாக, கடந்த பிப்., 28ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. தற்போது நிலைமை சீராகி, மற்ற விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்குகின்றன. ஆனால், ஸ்பைஸ்ஜெட் மட்டும் முன்வரவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us