ADDED : டிச 22, 2024 01:30 AM
சென்னை:சென்னையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த இருவரை, 'கியூ' பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இலங்கையைச் சேர்ந்த நவநாதன், 42. மனைவியை பிரிந்த நிலையில், 2015ல் கள்ளத்தனமாக படகு வாயிலாக தமிழகம் வந்துள்ளார். போலீசில் தன் விபரங்களை பதிவு செய்த அவர், மாங்காடு பகுதியில் தங்கி ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்.
பின்னாளில், தன் விபரங்களை புதுப்பிக்காமல், போலி ஆவணங்களை பயன்படுத்தி, ஆதார் போன்ற ஆவணங்களை பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து, இலங்கையை சேர்ந்த இலக்கியன், 52, தன் மகளுடன், 2019ல் கள்ளத்தனமாக படகில் வந்துள்ளார்.
இருவரும் மாங்காடு பகுதியில் தங்கி, ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர். இதில், இலக்கியனின் மகள், அதே பகுதியில் விடுதியில் தங்கி, பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பது குறித்து, கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, மாங்காடு பகுதியில் தங்கியிருந்த நவநாதன், இலக்கியனை, கியூ பிரிவு போலீசார், நேற்று கைது செய்தனர்.