sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

2533 ஆண்டு பழமையான காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியானார் ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்

/

2533 ஆண்டு பழமையான காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியானார் ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்

2533 ஆண்டு பழமையான காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியானார் ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்

2533 ஆண்டு பழமையான காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியானார் ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்

76


UPDATED : மே 01, 2025 06:08 AM

ADDED : ஏப் 30, 2025 07:17 AM

Google News

UPDATED : மே 01, 2025 06:08 AM ADDED : ஏப் 30, 2025 07:17 AM

76


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 2533 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, ஸ்ரீசத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு நேற்று (ஏப்.30ம் தேதி), அட்சய திருதியை நாளில் சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, சன்யாச தீட்சை வழங்கி ஆசி வழங்கினார். அதன்பின், இளைய மடாதிபதிக்கு சன்யாச தீட்சை வழங்கி, ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற பெயர் சூட்டப்பட்டது.



தீட்சை வழங்கும் நிகழ்ச்சி


காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70வது மடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இளைய பீடாதிபதிக்கு தீட்சை வழங்கும் வழிபாடுகள் நேற்று காலை 5.30 மணிக்கு ஆரம்பமாகியது. காலை 6:00 மணியில் இருந்து, 7:30 மணிக்குள் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் உள்ள பஞ்சகங்கை தீர்த்தத்தில், இளைய மடாதிபதியான, சத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மாவிற்கு 71வது மடாதிபதியாக சன்யாச தீட்சை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

தீர்த்த அபிஷேகம்


தீட்சை பெறுவதற்கு முன்பு திருக்குளத்தில் இறங்கிய கணேச சர்மா தனது கடுக்கண், மோதிரம், பூணூால், அரைஞாண் கயிறு ஆகியவற்றை துறந்து, மகிழ்ச்சியுடன் சந்நியாசத்தை ஏற்றார். அதன் பின் வேத மந்திரம் முழங்க காலை 6:30 மணிக்கு சன்யாச தீட்சை வழங்கினார் சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். தீட்சை வழங்கிய பிறகு காவி வஸ்திரம், கமண்டலம், தண்டத்தை ஸ்ரீகணேச சர்மாவுக்கு விஜயேந்திரர் வழங்கினார்.

Image 1412153


தொடர்ந்து இளைய மடாதிபதி தலையில் சாளக்கிராமம் வைத்து, சங்கு தீர்த்ததால் அபிஷேகம் செய்து, பல்வேறு மந்திர உபதேசங்கள் செய்தார். காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்றுள்ள கணேச சர்மாவுக்கு, ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று, பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நாமம் சூட்டினார். பின் இருவரும் இணைந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.

சந்நிதியில் தரிசனம்


தொடர்ந்து காலை 8.00 மணி முதல் 9.00 வரை ஸ்ரீ காமாட்சி அம்பாள் சந்நிதி மற்றும் ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் சந்நிதியில் தரிசனம் மற்றும் விஷேச பூஜைகள் நடந்தன. காலை 9 மணிக்கு ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் இருந்து ஸ்ரீமடத்திற்கு ஊர்வலம் துவங்கியது. மடம் வந்தடைந்ததும் ஸ்ரீ மஹா திரிபுர சுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வர சுவாமி சந்நிதியில் தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து பீடாதிபதிகள், ஸ்ரீ சங்கராச்சாரியார் மற்றும் ஸ்ரீ சுரேஷ்வராச்சாரியார் சந்நிதி, ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹா சுவாமிஜி மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் பிருந்தாவனத்தில் தரிசனம் செய்தனர்.

பிருந்தாவன் மண்டப மேடைக்கு சுவாமிகள் வருகை தந்தனர். வேத மந்திரம் முழங்க காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றார் ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். அவருக்கு சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி வழங்கினார்.

பக்தர்களுக்கு தரிசனம்


Image 1412159


தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களின் பல்வேறு கோவில்களில் இருந்து வந்த பிரசாதங்களை இளைய பீடாதிபதி பெற்றுக்கொண்டார். காலை 11.30 மணி முதல் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பூஜை, பிக்ஷாவந்தனம் மற்றும் பாத பூஜை சமர்ப்பணம் நடந்தது.

மாலை 5 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம் நடைபெறும், இரவு 7.30 மணிக்கு சந்திரமவுலீஸ்வர பூஜை நடைபெறுகிறது. விழாவில் தமிழக கவர்னர் ரவி, ஆதீனங்கள், மடாதிபதிகள், சன்னியாசிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச அய்யர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

சிறப்பு ஏற்பாடுகள்


சன்யாச தீட்சை வழங்கும் நிகழ்ச்சியை காண வந்தவர்கள் கோவில் தெற்கு வாசல் வழியாக வந்து, நவராத்திரி மண்டபம் வழியாக மாடத்துக்கு வந்து, அங்கிருந்து திருக்குளத்தில் நடந்த நிகழ்ச்சிகளை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பார்வையாளர் மாடத்தில் 3 அகண்ட திரைகள் வாயிலாகவும் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆதீனங்கள், மடாதிபதிகள், சன்னியாசிகள் ஆகியோருக்கு திருக்குளத்துக்கு நடுவில் அமைக்கப்பட்டிருந்த நகரும் தெப்பத்தில் அமந்து நிகழ்ச்சிகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் பூக்கடை சத்திரம், பேருந்து நிலையம், கச்சபேஸ்வரர் கோவில், பஜனை மண்டபம், காமாட்சி அம்மன் கோவில் மற்றும் சங்கர மடம் உள்ளிட்ட இடங்களில் இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பெயரில் டிராவிட் ஏன்?


புதிய பீடாதிபதிக்கு பெற்றோர் வைத்த பெயரின் கடைசியில் டிராவிட் என்ற வார்த்தை இருக்கிறது. பொதுவாக தமிழகத்தில் இருந்து வட இந்தியாவிற்கு குடி பெயர்பவர்கள், தங்கள் பெயருடன் டிராவிட் என்ற வார்த்தையையும் சேர்த்துக்கொள்வர்.

இவரது முன்னோர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் வலங்கைமான் பகுதியில் இருந்து ஆந்திராவுக்கு குடி பெயர்ந்தவர்கள். அதனால் தான் அவரது பெயரிலும் டிராவிட் என்ற வார்த்தை இருக்கிறது.






      Dinamalar
      Follow us