தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகளாம்: சொல்கிறார் சீமான்

நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகளாம்: சொல்கிறார் சீமான்

நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகளாம்: சொல்கிறார் சீமான்


UPDATED : ஜூன் 28, 2025 10:36 PM

ADDED : ஜூன் 28, 2025 07:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2025 10:36 PM ADDED : ஜூன் 28, 2025 07:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை : '' போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் குற்றவாளிகளா? அப்பாவிகள். இரண்டு பேரை கைது செய்ததினால் பேசுகிறீர்கள். இல்லை என்றால் விற்பனை தொடர்ந்து இருக்கும்,'' என நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறினார்.

மதுரையில் நிருபர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: ஒரு இனக்கூட்டம் 2 ஏக்கரில் மட்டும் வாழ்ந்து இருக்குமா? ஆயிரம், 500, 300 ஏக்கரில் கூடி தான் வாழ்ந்து இருப்பார்கள்.பிறகு கீழடியில் 2 ஏக்கர் மட்டும் தோண்டிவிட்டு ஏன் மூடினீர்கள் . மிச்சம் ஏக்கரை தோண்டுவதில் என்ன பிரச்னை ?

தமிழரின் தொன்மம், வரலாற்று அடையாளங்கள், பெருமை உலகத்துக்கு வந்துவிடும் என்பதே காரணம். இன்னும் ஹராப்பா, மொகாஞ்சதாரோ பேசிக் கொண்டுஇருக்கிறோம். இதனை தோண்டினால் தமிழரின் பெருமை தெரிந்து விடும். ஆதிச்சநல்லூரில் தோண்ட மாட்டீர்கள். மற்ற இடங்களை தோண்ட சொன்னால், செய்ய மாட்டீர்கள்.

கீழடியில் தோண்டி எடுத்ததை பெங்களூருவுக்கு கொண்டு சென்றது ஏன்? இங்கு வைக்க மாட்டார்கள். தமிழரின் பெருமை தெரிந்துவிடும்.தமிழ் பண்பாடு, தமிழரின் பண்பாடு ஏன் என சொல்ல மறுக்கின்றீர்கள்.எந்த பெருமையும் தமிழனுக்கு இருந்துவிடக்கூடாது என நினைக்கிறார்கள். எதுவும் இருந்துவிடக்கூடாது. இன்று தான் தெரிகிறதா கீழடி தமிழரின் தாய்மடி என்று.

விடுதலைக்கு போராடி இறந்தவர்களுக்கு அடையாளம் ஏதும் உள்ளதா? திட்டமிட்டு மறைக்கிறார்கள் என தெரிகிறது.

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவனுக்கு ரூ. 10 லட்சம் கொடுக்கிறார்கள். சாராய ஆலை வைத்து இருக்கும் முதலாளி எப்பபை கள்ளை மது என எப்படி சொல்லாம். இந்தியா முழுவதும் கள் விற்க அனுமதி உள்ளது. தமிழகத்தில் மட்டும் தடை ஏன்? மது விற்பனை பாதிக்கப்படக்கூடும் என்பதால் தடை செய்கிறார்கள்.

நடிகர்கள் ஸ்ரீகாந்த் கிருஷ்ணாவும் தான் போதைப்பொருள் விற்றனரா? வேறு யாரும் பயன்படுத்தவில்லையா?இந்தியா முழுவதும் போதைப்பொருள் கலாசாரம் இருக்கிறது. பயன்படுத்திய இரண்டு பேரை கைது செய்துள்ளீர்கள். விற்றவர்கள் எங்கே ? காட்டுக்குள் இருந்த வீரப்பனை கடத்தல்காரன் என கூறுவீர்கள். விற்றவர் காட்டுக்குள் இருந்தார். வாங்கியவர்கள் எங்கே இருந்தான்? வாங்கியவன் யாரை கைது செய்தீர்கள்?

ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் குற்றவாளிகளா? அப்பாவிகள். இரண்டு பேரை கைது செய்ததினால் பேசுகிறீர்கள். இல்லை என்றால் விற்பனை தொடர்ந்து இருக்கும். விற்கும்போது உடனே கைது செய்து விட்டீர்களா ?விற்றவர் யார்? ஸ்ரீகாந்த்துக்கு போதைப்பொருள் விற்றவர் அ.தி.மு.க.,வை சேர்ந்தவர் என்பதினால் திருப்புகிறீர்கள். தி.மு.க.,காரனுக்கும் போதைப்பொருள் விற்பனைக்கும் எந்த தொடர்பும் இல்லையா? குற்றவாளி யார்? விற்பனை செய்பவன் யார்? என பார்த்து கைது செய்ய வேண்டும். கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதால் போதைப்பொருள் விற்பனை நின்று விடுமா?, தடுக்கப்படுமா?

அப்பாவி பலியாயிட்டான் அவ்வளவு தான். இரண்டு பேரை தவிர வேறு யாரும் பயன்படுத்தவில்லையா?. போதைப்பொருள் விற்பனை குறித்து பாடகி சுசித்ரா கூறியுள்ளார். இந்த கலாசாரத்தை உருவாக்கியவர்கள் ஆட்சியாளர்கள் தான்.சாராயம் விற்கும் அரசு கொக்கைன் விற்பனை கைது செய்கிறது.குடிக்க போகும் போது காரில் செல்லாம். வரும் போது கைது செய்துவிடும் அளவுக்கு ஆட்சி முறை உள்ளது.குடித்துவிட்டு கார் ஓட்டக்கூடாது. குடித்தவிட்டு கார் ஓட்டலாம்.ஒருத்தனும் கேள்வி கேட்க்கூடாது. ஒருத்தனும் பேசக்கூடாது.இவ்வாறு சீமான் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us