சிறையில் இருந்து வெளியே வந்தார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன்
சிறையில் இருந்து வெளியே வந்தார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன்
ADDED : ஜன 02, 2025 12:10 AM

சென்னை:நீதிமன்றம் ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து, சென்னை புழல் சிறையில் இருந்து, ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் விடுவிக்கப்பட்டார்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். 'நமது கோவில்கள்' என்ற, 'யுடியூப்' சேனலை நடத்தி வருகிறார்.
கோவிலில் உள்ள சிலைகள் உள்ளிட்ட சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என, நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து, சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த மாதம், தன், 'யுடியூப்' சேனலில், ஜீயர்கள் குறித்து சில கருத்துகளைக் கூறி, வீடியோ வெளியிட்டார்.
இது, ஜீயர்கள் மற்றும் மடாதிபதிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஜீயர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரங்கராஜன் நரசிம்மனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
அவர் மீது அடுத்தடுத்து, ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அனைத்திலும் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. அதைத் தொடர்ந்து, நேற்று காலை, 11:30 மணிக்கு, புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரை அவரது நண்பர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.