எஸ்.ஆர்.எம்., நுழைவுத்தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு
எஸ்.ஆர்.எம்., நுழைவுத்தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : நவ 04, 2025 10:48 PM
சென்னை: எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில், பல்வேறு படிப்புகளில் சேருவதற்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
செ ன்னையில் காட்டாங்கொளத்துார், ராமாபுரம், வடபழனி, அ ச்சரப்பாக்கம் மற்றும் திருச்சி, டில்லி, காசியாபாத், சோனிபத், அமராவதி ஆகிய இடங்களில் உள்ள, எஸ். ஆர்.எம்., தொழில்நுட்ப நிறுவனங்களில், பொறியியல்.
தொழில்நுட்பம், மேலாண்மை, அறிவியல் மற்றும் மனிதவியல், சட்டம், மருத்துவம், சுகாதார அறிவியல், வேளாண் அறிவியல் உள்ளிட்ட துறைகளில், பல்வேறு புதிய ப டிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் சேருவதற்கான நுழைவு தேர்வுகள், அடுத்த ஆண்டு மார்ச் முதல் ஜூலை வரை, மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளன. அதற்கு, 'www.srmist.edu.in' என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இந்த தேர்வுகளில் முதலிடம் பெறுவோருக்கு, நிறுவனர் உதவித்தொகையாக, கல்விக்கட்டணம், விடுதி கட்டணம் போன்றவை வழங்கப்படும்.
தரவரிசை அடிப்படையில், 25 முதல் 100 சதவீதம் வரையிலான கல்விக்கட்டண தள்ளுபடியும் வழங்கப்படும்.

