மனை தகராறில் கத்திக்குத்து; பா.ம.க. ஒன்றிய செயலர் கைது
மனை தகராறில் கத்திக்குத்து; பா.ம.க. ஒன்றிய செயலர் கைது
ADDED : ஜன 22, 2024 06:37 AM
ஜோலார்பேட்டை : திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அடுத்த ஆம்பள்ளி ரோடு பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் மகன் சிவராமன், 27. கந்தகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார், 34. இருவரும், ஆம்பள்ளியில், அருகருகே வீட்டு மனை வாங்கியுள்ளனர்.
தற்போது பிரேம்குமார் கட்டடம் கட்டி வருகிறார். புஷ்பராஜுக்கும், பிரேம்குமாருக்கும் இரு நாட்களுக்கு முன், மனை தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
பிரேம்குமாருக்கு ஆதரவாக கந்திலி, பா.ம.க., ஒன்றிய செயலர் கோவிந்தராஜ், 37, பேசும்போது, 'இந்த விவகாரத்தில் நீ தலையிடாதே' என கூறிய புஷ்பராஜை, கோவிந்தராஜ் தாக்கினார்.
தந்தையை தாக்கியதை அறிந்த மகன்கள் சிவராமன் மற்றும் அவரது அண்ணன் சிங்காரவேலன், 30, ஆகியோர் கடந்த, 19ல் இரவு, கோவிந்தராஜை இரும்பு கம்பியால் தாக்கினார்.
ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த சிவராமன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கந்திலி போலீசார், கோவிந்தராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.