UPDATED : ஜன 20, 2024 01:36 PM
ADDED : ஜன 19, 2024 07:53 PM

சென்னை: கேலோ விளையாட்டு போட்டி அரங்கிற்குள் நுழைந்த முதல்வர் ஸ்டாலின் திடீரென கால் இடறி தடுமாறினார். அவரை கைத்தாங்கலாக தாங்கி பிடித்தார் பிரதமர் மோடி.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் துவக்க விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், கவர்னர் ரவி , முதல்வர் ஸ்டாலின்,தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
துவக்க விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். இருவரும் விழா அரங்கில் நுழைந்து போது திடீரென ஸ்டாலின் கால் இடறி நிலை தடுமாறினார். உடன் வந்த பிரதமர் மோடி கீழே விழாமல் ஸ்டாலினை கைத்தாங்கலாக தாங்கி பிடித்துக்கொண்டார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
பிரதமருடன் முதல்வர் சந்திப்பு
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடியை நேரு விளையாட்டு அரங்கில் 20 நிமிடங்கள் சந்தித்து பேசினார். சந்திப்பின் போது தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர், பிரதமரிடம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் வெள்ள நிவாரண நிதி குறித்தும் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. பிரதமர் முதல்வர் சந்திப்பின் போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி உடன் இருந்தார்.

