குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மழைநீர் தேக்கம்!
குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மழைநீர் தேக்கம்!
ADDED : நவ 30, 2024 05:51 PM

சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்கி உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: கனமழை காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் முதல் தளத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. அங்குள்ள டாக்டர்கள், நர்சுகள் மற்றும் நோயாளிகளுடன் கலந்துரையாடினேன். சவாலான நேரத்தில் ஓய்வில்லாமல் பணியாற்றிய டாக்டர்கள் மற்றும் அவர்களது குழுவினருக்கு பாராட்டுகள்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண 300 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை ரூ.110 கோடி செலவில் கட்டப்படுகிறது. இது கட்டுமானத்தில் உள்ளது. அடுத்தாண்டு முதல் செயல்பட துவங்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.