வாக்கிங்...மார்க்கெட்டில் விசிட்...: ஸ்டாலின் பிரசாரம்
வாக்கிங்...மார்க்கெட்டில் விசிட்...: ஸ்டாலின் பிரசாரம்
ADDED : மார் 23, 2024 11:08 AM

தஞ்சாவூர், -தஞ்சாவூர் லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி, நாகப்பட்டினம் வேட்பாளர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த செல்வராஜ் ஆகிய இருவருக்கும் ஓட்டு கேட்டு, இன்று மாலை திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
இதற்காக நேற்று இரவு தஞ்சாவூர் வந்த ஸ்டாலின்,இன்று காலை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில்,வேட்பாளர் முரசொலியுடன் வாக்கிங் சென்ற முதல்வர் ஸ்டாலின் குழந்தைகளுடன் செல்பி , வாலிபால் விளையாட்டு என சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக வாக்கிங் வந்தவர்களிடமும் பொதுமக்களிடமும் வாக்கு சேகரித்தார்.
பின்னர் அங்கிருந்து ராமராஜ் மார்க்கெட்டில் வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் ஓட்டு கேட்டு விட்டு,கீழ ராஜகிரியில் உள்ள டீக்கடை ஒன்றில் கட்சியினருடன் டீ குடித்தார்.
பிறகு 16 விவசாய அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் , முதல்வர் ஸ்டாலினை சந்தித்து எம் எஸ் சுவாமிநாதன் பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்த வலியுறுத்த வேண்டும், தமிழக நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர்.

