முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம்: தமிழகத்திற்கு ரூ.13,016 கோடிக்கு முதலீடுகள் ஈர்ப்பு
முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம்: தமிழகத்திற்கு ரூ.13,016 கோடிக்கு முதலீடுகள் ஈர்ப்பு
ADDED : செப் 05, 2025 05:37 PM

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் மூலம் தமிழகத்திற்கு ரூ.13,016 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், இந்துஜா குழுமம், தமிழக அரசுடன் மின்சார வாகனம், பேட்டரி தொழில் நுட்பம் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தியில் 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்திட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் 1,000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
மேலும், அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் மூன்றாவது தொழில் முதலீட்டை அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள அதன் உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மையத்தை (GITC) 176 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்திடவுள்ளது.
இதன்மூலம், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முதல்வரின் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கான பயணத்தால் தமிழகம் பெற்ற மொத்த முதலீடு 13,016 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மொத்தம் 17,813 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.