UPDATED : ஏப் 03, 2024 09:01 AM
ADDED : ஏப் 03, 2024 08:39 AM

சேலம்: சேலம் கடைவீதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், திருவண்ணாமலை மார்க்கெட் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு சேகரித்தனர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் பல இடங்களில் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சேலத்தில் கடைவீதிகளில் முதல்வர் ஸ்டாலின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடைபயணமாக வந்து ஓட்டு சேகரித்தார். இந்த நிலையில், இன்று (ஏப்.,3) காலையில் சேலம் கடைவீதிகளில் காய்கறி வியாபாரிகளிடம் அ.தி.மு.க., வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ் ஓட்டு சேகரித்தார்.


