ADDED : ஏப் 01, 2025 08:00 PM
ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளை அப்படியே பின்பற்றும் இயக்கமாக பா.ஜ., மாறிவிட்டது. அதனாலேயே, மத்தியில் மக்கள் விரோத ஆட்சி நடத்தப்படுகிறது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பிழைக்க வேண்டும் என, மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
இந்த ஆட்சியிடம் இருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்ற இடதுசாரிகள் ஒன்றுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது ஒன்று சேர்ந்துள்ளோம். ஜனநாயகம் காப்பாற்றப்பட மோடி அரசு வீழ்த்தப்பட வேண்டும்.
மோடி, சுதந்திரமாக ஆட்சி செய்வதாக கூறினாலும், பின்னணியில் ஆட்சி செய்வது ஆர்.எஸ்.எஸ்., தான்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் மொழிக் கொள்கை, கல்விக் கொள்கை உள்ளிட்டவைகளில் முன்மாதிரியாக செயல்படுகிறார். தமிழக உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடுகிறார்.
டி.ராஜா, தேசிய செயலர், இந்திய கம்யூ.,

