திமுக மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு அமைத்தார் ஸ்டாலின்
திமுக மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு அமைத்தார் ஸ்டாலின்
ADDED : ஜூன் 30, 2026 09:54 PM

சென்னை: திமுக மறுசீரமைப்பு ஆலோசனைக் குழுவை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அமைத்துள்ளார். இந்த குழுவில் மொத்தம் 10 பேர் இடம்பெற்று உள்ளனர்.
சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணங்கள் என்ன என்பதை ஆய்வு செய்ய திமுக தலைவர் ஸ்டாலின் மே 14ம் தேதி 19 குழுக்களை அமைத்தார். இந்த குழுக்களில் இடம் பெற்றிருந்தோர், தொண்டர்கள், நிர்வாகிகளை சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தனர்.
பின்னர் கள ஆய்வுக்குழுவினர் அறிக்கை ஒன்றை தயாரித்து ஸ்டாலினிடம் சமர்ப்பித்து இருந்தனர். இந் நிலையில், திமுக மறுசீரமைப்பு ஆலோசனைக் குழுவை ஸ்டாலின் அமைத்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளார்.
எக்ஸ் பதிவில் கூறி உள்ளதாவது;
உங்களின் குரல்களைக் கேட்டேன்; ஆய்வறிக்கைகளைப் படித்தேன். கட்சியின் அடுத்த நூறாண்டுக்கான பயணத்தைத் திட்டமிட மறு சீரமைப்பு ஆலோசனைக் குழு அமைக்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ள ஸ்டாலின், மறுசீரமைப்புக் குழுவில் இடம்பெற்று உள்ளவர்களின் பெயர்களையும் வெளியிட்டு உள்ளார்.
அதன் விவரம் வருமாறு;
தங்கம் தென்னரசு
கீதா ஜீவன்
சக்கரபாணி
சிவசங்கர்
தமிழரசி ரவிக்குமார்
எம்.எம். அப்துல்லா
பரந்தாமன்
முரசொலி
எழிலன்
எஸ்.கே.பி. கருணா
