சமூக நீதி குறித்து ஸ்டாலினுக்கு கவலை வேண்டாம்: ராமதாஸ் காட்டம்
சமூக நீதி குறித்து ஸ்டாலினுக்கு கவலை வேண்டாம்: ராமதாஸ் காட்டம்
ADDED : மார் 30, 2024 05:16 PM

சென்னை: ‛‛ தமிழகத்தில் சமூக நீதி செடிக்கு வெந்நீர் ஊற்றி அழிக்கும் முதல்வர் ஸ்டாலின், சமூக நீதி குறித்த கவலை கொள்ள வேண்டாம்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சமூகநீதி பேசும் ராமதாஸ் எங்கே இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும். சமூகநீதிக்கு எதிரான பா.ஜ., உடன் ராமதாஸ் எப்படி கூட்டணி அமைத்தார் என்பது ரகசியம் என்றார்.
இது தொடர்பாக ராமதாஸ் கூறியதாவது: சமூக நீதி குறித்த பா.ம.க., கோரிக்கைகளை பிரதமர் ஏற்பாரா என ஸ்டாலின் கேள்வி எழுப்புகிறார். கலேல்கர் அறிக்கையை குப்பையில் போட்ட காங்கிரஸ் அரசிடம் இருந்து, 27 சதவீத அறிக்கையை பெற்றுத் தந்தது பா.ம.க., தே.ஜ., கூட்டணியிலும் வலிமையாக இருக்கும் பா.ம.க.,வால் சமூக நீதியை வென்றெடுத்து கொடுக்க முடியும்.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு சமூக நீதி குறித்து பா.ம.க.,வுக்கு ஸ்டாலின் பாடம் நடத்தட்டும். சமூக நீதி செடிக்கு வெந்நீர் ஊற்றி அழிக்கும் ஸ்டாலின், சமூக நீதி குறித்து கவலை வேண்டாம். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

