மதுரையில் ஜல்லிக்கட்டு விழா: ஸ்டாலின், உதயநிதி பங்கேற்பு
மதுரையில் ஜல்லிக்கட்டு விழா: ஸ்டாலின், உதயநிதி பங்கேற்பு
UPDATED : ஜன 11, 2026 06:14 AM
ADDED : ஜன 11, 2026 03:36 AM

மதுரை: மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில், வரும் 15ல் ஜல்லிக்கட்டு போட்டி துவங்குகிறது.
ஜன., 16ல் பாலமேட்டில் நடைபெறவுள்ள போட்டியை துணை முதல்வர் உதயநிதியும், ஜன., 17ல் அலங்காநல்லுாரில் நடைபெறவுள்ள போட்டியை முதல்வர் ஸ்டாலினும் துவக்கி வைக்கின்றனர்.
இப்போட்டிகளுக்காக அவனியாபுரத்தில், 3,090, பாலமேட்டில், 5,747, அலங்காநல்லுாரில், 6,210 என, மொத்தம், 15,047 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்தாண்டை விட, 2,415 காளைகள் அதிகம். அதுபோல் அவனியாபுரத்தில், 1,849, பாலமேட்டில், 1,913, அலங்காநல்லுாரில், 1,472 என, மொத்தம், 5,234 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். கடந்தாண்டை விட, 735 வீரர்கள் அதிகம்.
அலங்காநல்லுாரில் முதல்வர் வருகையை முன்னிட்டு, இரண்டடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டினர் போட்டிகளை கண்டு ரசிப்பதற்கான கேலரிகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

