ADDED : நவ 09, 2025 12:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரேசில் மாடல் அழகி படத்தை 'மார்ப்' செய்து 22 முறை ஹரியானா தேர்தலில் ஓட்டளித்ததாக ராகுல் கூறினார். அதற்கு அந்த பெண்மணி, 'இந்தியா பக்கமே நான் வந்ததில்லை; எப்படி ஓட்டளித்திருக்க முடியும்?' என மறுப்பு தெரிவித்து விட்டார். ராகுல் சொன்ன பொய்யை நம்பி, முதல்வர் ஸ்டாலினும் அதிர்ச்சி அடைந்ததாக கூறினார். ஸ்டாலினின் இச்செயல் தமிழக மக்களை தலைகுனிய வைத்து விட்டது.
சிறப்பு வாக்காளர் கணக்கெடுப்பு பணியை கடைப்பிடிக்க மாட்டேன் என சொல்லும் தைரியம் ஸ்டாலினுக்கு இருக்கிறதா? அவரது கட்சியை தேர்தல் கமிஷனில் பதிவு செய்தபோதே, தேர்தல் கமிஷன் விதிகளுக்கு கட்டுப்பட்டு நடப்போம் என 'அபிடவிட்' கொடுத்துள்ளனர். எனவே, தேர்தல் கமிஷனின் நடவடிக்கையை மீறினால், கட்சி அங்கீகாரம் ரத்தாகி விடும்.
- எச்.ராஜா
மூத்த தலைவர், பா.ஜ.,

