ADDED : பிப் 20, 2024 01:45 AM
பா.ஜ., கூட்டணியிலிருந்து விலகிய அ.தி.மு.க., தன் தலைமையில், கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறது. ஆனால், இதுவரை எந்த கட்சியும் கூட்டணி சேர முன்வரவில்லை. சில கட்சிகளிடம் ரகசிய பேச்சு நடந்து வருவதாக, கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
கூட்டணிக்கு கட்சிகள் எதுவும் வராவிட்டால், புதுச்சேரி உள்ளிட்ட, 40 லோக்சபா தொகுதிகளிலும், அ.தி.மு.க., தனித்து களம் இறங்க முடிவு செய்துள்ளது.
எனவே, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரி லோக்சபா தொகுதியிலும், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோர், நாளை முதல் மார்ச் 1 வரை, கட்சி தலைமை அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று மனு அளிக்கலாம் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தினமும் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை விண்ணப்பம் பெற்று, அதை பூர்த்தி செய்து அளிக்கலாம். பொதுத் தொகுதிக்கு, 20,000 ரூபாய்; தனித்தொகுதிக்கு 15,000 ரூபாய், விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

