ஸ்டார்ட்அப் தரவரிசை பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து முதலிடம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
ஸ்டார்ட்அப் தரவரிசை பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து முதலிடம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
ADDED : ஜன 17, 2024 01:15 PM

சென்னை: ஸ்டார்ட்அப் தரவரிசைப் பட்டியலில், கடந்த ஆட்சிக் காலத்தில் 2018ல் கடைசித் தரநிலையில் இருந்த தமிழகம், 2022ல் முதலிடத்தை அடைந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்டாலினின் பதிவு: ஸ்டார்ட்அப் தரவரிசைப் பட்டியலில், கடந்த ஆட்சிக் காலத்தில் 2018ல் கடைசித் தரநிலையில் இருந்த தமிழகம், நமது திராவிட மாடல் ஆட்சியில் 2022ம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது.
டான்சீட் (TANSEED) புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர், பழங்குடியினர் தொழில் நிதியம், லாஞ்ச்பேட் நிகழ்வுகள் என ஒட்டுமொத்தமாக நமது அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளாலேயே தமிழகம் இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 7600 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் 2022ம் ஆண்டில் மட்டும் 2,250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்று. இந்தச் சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கும் அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இந்த இடத்தைத் தக்கவைக்கவும் மேலும் உயரங்களைத் தொட உழைக்கவும் வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

