ADDED : ஜூன் 14, 2025 04:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ''பிரதமர் வீடு வழங்கும் திட்டம், பிரதமர் மீன்வளத் திட்டம் ஆகியவற்றுக்கு மாநில அரசு தான் அதிகமாக நிதி அளிக்கிறது'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் மத்திய அரசைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்!
இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை மத்திய பா.ஜ., அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.