தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சிலை கடத்தல் வழக்கு தொழில் அதிபர் அலுவலகத்தில் சோதனை

 சிலை கடத்தல் வழக்கு தொழில் அதிபர் அலுவலகத்தில் சோதனை

 சிலை கடத்தல் வழக்கு தொழில் அதிபர் அலுவலகத்தில் சோதனை


ADDED : ஆக 28, 2026 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 11:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக, சென்னை கிண்டியில் உள்ள தொழில் அதிபர் ரன்வீர் ஷா, 52, அலுவலகத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.

கடந்த 2016ல், சிலை கடத்தல் தொடர்பாக, சென்னையை சேர்ந்த தீனதயாளன் கைது செய்யப்பட்டார். அப்போது, அவருடன் சென்னை சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனியில் வசிக்கும், தொழில் அதிபர் ரன்வீர்ஷா, நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.

அப்போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி.,யாக இருந்த பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், ரன்வீர்ஷா அவரது தோழி கிரண் ராவ் ஆகியோரை வழக்கில் சேர்த்தனர்.

தொடர் விசாரணைக்கு பின், கடந்த, 2018ல், ரன்வீர்ஷா வீடு, காஞ்சிபுரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, அவரது பண்ணை வீடுகளில் சோதனை நடத்தி, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள, பழங்கால கோவில் கற்சிலைகள், கலை நயமிக்க பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

தீனதயாளன் தற்போது உயிருடன் இல்லை என்பதால், ரன்வீர்ஷா மற்றும் கிரண் ராவ் ஆகியோர் மீது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக, சென்னை கிண்டியில், ரன்வீர்ஷா அலுவலகத்தில், நேற்று சோதனை நடத்தினர். கடந்த, 2018ல் பறிமுதல் செய்யப்பட்ட, யானை, நந்தி மற்றும் சிங்க வானங்கள் உட்பட, ஐந்து சிலைகள் அங்கு இருந்தன. அதனை, ஆய்வுக்காக நேற்று எடுத்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us