UPDATED : அக் 07, 2026 07:48 PM
ADDED : அக் 07, 2026 07:44 PM
== புல் அவுட் ==
முதல்வர் விஜயும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியும், ஹிந்து கடவுள்களை மையப்படுத்தி அடுக்கு மொழியில் பேசுவதும், ஹிந்துக்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தி கிண்டல் செய்வதும் கண்டிக்கத்தக்கது. அவர்களுக்கு தைரியம் இருந்தால், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் பற்றி இப்படி பேச முடியுமா? ‘பராசக்தி’ திரைப்படத்தில், கருணாநிதி எப்போது வசனம் எழுதினாரோ, அன்றில் இருந்தே, கோவில்கள், கொள்ளையர்களின் கூடாரமாகி விட்டன.
ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோவில்களில் தான், முறைகேடுகள் அதிகமாக உள்ளது. வி.ஐ.பி. தரிசனம் இல்லை என கூறினாலும், தொடர்ந்து நடைபெறுகிறது. கோவில்களை நிர்வகிப்பதற்கு, அறநிலைய துறைக்கு தார்மீகமான, சட்டபூர்வமான உரிமை கிடையாது. கோவில் அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகத்தை கண்காணிக்கும் அமைப்பாக மட்டுமே அது இருக்க வேண்டும்.
– நாராயணன் திருப்பதி
தலைமை செய்தி தொடர்பாளர்
தமிழக பா.ஜ.,
