புயலாக மாறிய டானா! கோவை, திண்டுக்கல், நீலகிரியில் கொட்டி தீர்த்தது கனமழை!
புயலாக மாறிய டானா! கோவை, திண்டுக்கல், நீலகிரியில் கொட்டி தீர்த்தது கனமழை!
UPDATED : அக் 23, 2024 08:47 AM
ADDED : அக் 23, 2024 07:33 AM
முழு விபரம்

சென்னை: கோவை, திண்டுக்கல், நீலகிரியில் கனமழை கொட்டி தீர்த்தது. கோவையில் அதிகபட்சமாக 9 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (அக்.,23) புயலாக உருவானது. இது, நாளை இரவு ஒடிசா - மேற்கு வங்கம் கடற்கரை பகுதியில், புரி - சாகர் தீவுகள் இடையே கரையை கடக்கக்கூடும். புயலுக்கு 'டானா' என பெயரிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்றிரவு பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கோவை, திண்டுக்கல், நீலகிரியில் கனமழை கொட்டி தீர்த்தது.
கோவையில் கனமழை காரணமாக காரமடை அருகே ஓடையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 2 கார்கள் அடித்து செல்லப்பட்டன. கோவையில் அதிகபட்சமாக 9 செ.மீ மழை பதிவாகி உள்ளது. திண்டுக்கல், நீலகிரியில் தலா 6.செ.மீ மழையும், திருப்பூரில் 5 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழை வார்னிங்
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று(அக்.,23) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், மழைப்பொழிவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:
கோவை மாவட்டம்
கோவை விமான நிலையம்- 87.6
மேட்டுப்பாளையம் 31
தொண்டாமுத்தூர் 31
ரேஸ் கோர்ஸ் 29
வேளாண் பல்கலை., 47
வடவள்ளி 35.4
ஒண்டிப்புதூர் 34.4
சூலூர் 27.2
பீளமேடு 26.6
காந்திபுரம் 22.8
கிணத்துக்கடவு 21
பில்லூர் அணை 18
அன்னூர் 16.2
போத்தனூர் 14.4
கவுண்டம்பாளையம் 12.8
சேலம் 40.7
வாழப்பாடி 40
ஏற்காடு 31.4
ஏத்தாப்பூர் 23
கரிய கோவில் அணை 20
தம்மம்பட்டி 18
தலைவாசல் 17
எடப்பாடி 16.2
திருச்சி மாவட்டம்
மணப்பாறை 66
கொப்பம்பட்டி 50
திருவாரூர் மாவட்டம்
நீடாமங்கலம் 32.4
நாமக்கல் மாவட்டம்
குமாரபாளையம் 38.2
மங்களபுரம் 32.8
திருச்செங்கோடு 28
சேந்தமங்கலம் 11
கிருஷ்ணகிரி
ஜம்பு குட்டப்பட்டி 42
தளி 40
பரூர் 21.8
கள்ளக்குறிச்சி மாவட்டம்
மணலூர் பேட்டை 43
கள்ளக்குறிச்சி 12
சென்னை
மலர் காலனி 26.4
அண்ணாநகர் 13
வளசரவாக்கம் 9.6
ஈரோடு மாவட்டம்
கோபிசெட்டிபாளையம் 63.2
ஈரோடு 49.8
எலந்த குட்டை மேடு 27
கொடுமுடி 20
குண்டேரி பள்ளம் 8
கன்னியாகுமரி
மயிலாடி 37.2
மாம்பழத்துறை ஆறு 30
தக்கலை 22.4
குளச்சல் 18.2
கரூர் மாவட்டம்
க.பரமத்தி 84.2
அணைப்பாளையம் 42
பஞ்சப்பட்டி 28
அரவக்குறிச்சி 23
ராமநாதபுரம் மாவட்டம்
மண்டபம் 60.2
தங்கச்சிமடம் 16.6
தென்காசி மாவட்டம்
செங்கோட்டை 68
சிவகிரி 46
ராமா நதி 30
குண்டாறு அணை 22
சங்கரன்கோவில் 19.5
நீலகிரி மாவட்டம்
கீழ்க்கோத்தகிரி 37
கிளென்மார்கன் 29
அவலாஞ்சி 21
தேனி மாவட்டம்
தேக்கடி 52
பெரியகுளம் 42
அரண்மனை புதூர் 26.6
வைகை அணை 14.6
மதுரை மாவட்டம்
பேரையூர் 51.2
தல்லாகுளம் 48.6
உசிலம்பட்டி 43
திருமங்கலம் 42.4
இடையம்பட்டி 30
மதுரை வடக்கு 22.2
விமான நிலையம் 18.6
சோழவந்தான் 12
திருப்பூர் மாவட்டம்
கலெக்டர் முகாம் அலுவலகம் 73
குண்டடம் 71
உடுமலை 60
திருப்பூர் வடக்கு தாலுகா ஆபிஸ் 42
தாராபுரம் 41
உப்பார் அணை 36
மடத்துக்குளம் 35
அவிநாசி 28
திருப்பூர் தெற்கு தாலுகா ஆபிஸ் 27
கலெக்டர் ஆபீஸ் 26
நல்லதங்காள் ஓடை 25
பல்லடம் 23
காங்கேயம் 15
பள்ளிகளுக்கு லீவு
கனமழை காரணமாக, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று(அக்.,23) அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.