தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை: முதல்வர் உத்தரவு
தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை: முதல்வர் உத்தரவு
ADDED : மே 02, 2025 09:53 PM

சென்னை: தெருநாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவது பற்றிய பணிகள் குறித்து இன்று(மே 2) ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு;
* மாநிலம் முழுவதும் நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கான மருத்துவ வசதிகளை உருவாக்க வேண்டும்.
* கால்நடை அறிவியில் பல்கலை. மற்றும் அதன் விரிவாக்க மையங்களில் கருத்தடை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
•அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் நாய்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
* நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்வது தொடர்பாக மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்க அறிவுறுத்த வேண்டும்.
* உடல்நலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை மீட்டு சிகிச்சை அளிக்க காப்பகங்களை உருவாக்க வேண்டும்.
* அனைத்து துறைகளும் இணைந்து நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.