sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோவையில் கல்லுாரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 பேரை தேடும் போலீஸ்

/

கோவையில் கல்லுாரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 பேரை தேடும் போலீஸ்

கோவையில் கல்லுாரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 பேரை தேடும் போலீஸ்

கோவையில் கல்லுாரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 பேரை தேடும் போலீஸ்

36


ADDED : நவ 03, 2025 10:45 AM

Google News

36

ADDED : நவ 03, 2025 10:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த, 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை விமான நிலையத்தின் பின்புறம், நேற்றிரவு (நவ.,02) தனது ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் மாணவியை கடத்த முயற்சி செய்தனர். இதையடுத்து மாணவியின் ஆண் நண்பர், 3 பேரிடம் இருந்து காப்பாற்ற போராடி உள்ளார்.

ஆனால் மாணவியின் ஆண் நண்பரை தாக்கி, மயக்கம் அடைய செய்துவிட்டு, கடத்தி சென்றனர். அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, 3 பேரும் தப்பி சென்றனர். பின்னர் மாணவியின் ஆண் நண்பர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். இது தொடர்பாக, 3 பேர் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.

7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கோவை விமான நிலைய பகுதியில் கல்லுாரி மாணவி ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us