‘யூ டியூப்’ பார்த்து பரிசோதனை: தீப்பிடித்து மாணவன் படுகாயம்
‘யூ டியூப்’ பார்த்து பரிசோதனை: தீப்பிடித்து மாணவன் படுகாயம்
UPDATED : அக் 10, 2026 08:33 PM
ADDED : அக் 10, 2026 07:46 PM
திருப்பத்துார்: ‘யூ டியூப்’ பார்த்து பரிசோதனை செய்த மாணவர் கவின், 11, மீது, தீ பிடித்ததில் பலத்த காயமடைந்தார்.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை, சோலையூரை சேர்ந்தவர் கவியரசு, 40. இவரது மகன் கவின். அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில், 6ம் வகுப்பு படித்தார். நேற்று பள்ளியில், ‘பேரன்ட்ஸ் மீட்டிங்’ நடக்க இருந்த நிலையில், அதற்காக கவின் தயாராகி கொண்டிருந்தார். அப்போது, பள்ளியில், ‘ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும்’ என, யூ டியூப் பார்த்து, வீட்டின் மொட்டை மாடியில், செய்முறை பரிசோதனை செய்து கொண்டிருந்தார். தின்னர் திரவத்தை வைத்து, பரிசோதனை செய்தபோது, அது தீப்பிடித்து, அவரது உடல் முழுதும் பரவியது.
கவின் அலறி கூச்சலிட்டதில், கவியரசு வந்து தீயை அணைத்தார். இதில், இருவரும் காயமடைந்தனர். கவின், 80 சதவீத காயத்துடன், சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜோலார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
