UPDATED : ஆக 30, 2024 11:54 AM
ADDED : ஆக 30, 2024 11:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: திருச்சி என்.ஐ.டி., கல்லூரி விடுதியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. விடுதி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து விடிய விடிய மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
கல்லூரி வளாகத்தில் உள்ள என்.ஐ.டி., இயக்குனர் அகிலாவின் வீட்டை முற்றுகையிட்ட மாணவிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். மாணவி புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒப்பந்த ஊழியர் கதிரேசனை கைது செய்தனர்.