ADDED : நவ 11, 2024 06:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: வேளாண் வளர்ச்சிக்காக நிலத்தின் தன்மை, அளவு, பயிர் வகைகள், விவசாயிகள் வருமானம் உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்துடன், நிலங்களை 'டிஜிட்டல்' முறையில் சர்வே செய்ய, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
டிஜிட்டல் சர்வேக்கு தேவையான, அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்தி தராமல், இந்த பணிகளை செய்யும்படி வி.ஏ.ஓ.,க்கள் கட்டாயப்படுத்தப்பட்டதால், அதை செய்ய முடியாது என அவர்கள் மறுத்து விட்டனர்.
அதனால் இப்பணியில் மாணவர்களை திணித்துள்ளனர். மாணவர்களை விடுவித்து, டிஜிட்டல் பயிர் சர்வே பணியை, வேறு அமைப்புகள் வாயிலாக தமிழக அரசு செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.