UPDATED : நவ 12, 2024 05:05 PM
ADDED : நவ 12, 2024 04:52 PM

மயிலம்: மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், அவரது மேஜையில் இருந்து ரூ.1 லட்சம் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு வரும் பொது மக்களிடம் ஆவண எழுத்தர்கள், புரோக்கர்கள் மூலம் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, கடந்த 8 ம் தேதி மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில், சார்பதிவாளர் வெங்கடேஸ்வரி மேஜை துணிக்கு அடியில் ரூ.1 ,00,000 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வீர அப்துல்லா மேஜை அருகே ஜன்னலில் இருந்து ரூ.1,100ம்
கேமரா ஆபரேட்டரிடம் கணேசன் மேஜை அருகில் இருந்த ஜெராக்ஸ் இயந்திரம் கீழ் ரூ.10,540ம்
அலுவலக உதவியாளர் பாலசுப்ரமணியன் மேஜை அருகில் ரூ.2,200ம்
செல்வம் என்ற புரோக்கரிடம் ரூ.300ம்
சரவணன் என்ற புரோக்கரிடம் ரூ.8 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் சார்பதிவாளர் இருக்கைக்கு எதிரில் உள்ள அறையில் இருந்த பீரோவில் ரூ.8,200மும் உட்பட அலுவலகத்தில் கணக்கில் வராத மொத்தம் ரூ.1,30,340 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வெங்கடேஸ்வரி, வீர அப்துல்லா, பாலசுப்ரமணியன், கணேசன், புரோக்கர்கள் செல்வம், சரவணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதனைதொடர்ந்து, சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

