தோட்டக்கலை இயக்கத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் மானியம் : அரசு அறிவுரை
தோட்டக்கலை இயக்கத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் மானியம் : அரசு அறிவுரை
ADDED : ஜூலை 11, 2011 11:34 PM
தேனி : தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் மானியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் மா, நெல்லி, வாழை, திராட்சை, கொட்டை முந்திரி, கோ-கோ உட்பட பல பொருட்களை சாகுபடி செய்ய அரசு மானியம் வழங்குகிறது. வழக்கமாக மானிய திட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இலக்கு நிர்ணயிக்கப்படும். ஆனால் தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் மட்டும் அனைத்து விவசாயிகளுக்கும் மானியம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க 75 சதவீதம் மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 65 சதவீதம் மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. சொட்டுநீர் பாசன விவசாயிகளுக்கு நூறு சதவீதம் மானியம் வழங்குவது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.