உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 22, 2026 06:29 AM

அ நிறம் | அளவு
சென்னை: மகளிர் கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தை விரிவுபடுத்த, அரசு திட்டமிட்டுள்ளது. திட்டத்திற்கு, 'வெற்றி பயணம்' என, பெயரிடப்பட்டு உள்ளது. அக்., 2 முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.
மாநகர, நகரப் பகுதிகளில் இயங்கும், எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ், அரசு பேருந்துகள், புறநகர் சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கி.மீ.,க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண பேருந்துகள் என, 12 ஆயிரத்து 692 பேருந்துகளில், இலவசமாக மகளிர் பயணம் செய்யலாம்.
திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகளுடன், முதல்வர் விஜய், ஆலோசனை நடத்தினார். துறை அமைச்சர் பார்த்திபன், தலைமைச் செயலர் சாய்குமார், நிதித்துறை செயலர் சித்திக், துறை செயலர் நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
