UPDATED : ஜூலை 25, 2011 07:21 PM
ADDED : ஜூலை 25, 2011 09:34 AM
மதுரை: மதுரை சிறையில் ஆயுள்தண்டனை கைதி பிச்சை காளி(32) என்பவர், காலை மரத்தில் இருந்து குதித்து, கணுக்காலை உடைத்துக் கொண்டார்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மலையடிப்பட்டியை சேர்ந்த இவர், கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று, 2007 ஜூலை முதல் மதுரை சிறையில் உள்ளார்.
குடும்பத்தினர் யாரும் வந்து பார்க்காததால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மனஅழுத்தத்தில் இருந்தார். 'என்னை சாகவிடுங்கள்' என்று அடிக்கடி சிறை அதிகாரிகளிடம் முறையிட, பயந்து போன அவர்கள், கடந்த 20ம் தேதி சிறை ஆஸ்பத்திரி மறுவாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், காலை 7 மணிக்கு மரத்தில் ஏறிய பிச்சைகாளி, தான் சாகப்போவதாக கூறி, ஆறு அடி உயரத்தில் இருந்து குதித்தார். இதில் வலது கணுக்காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது. தற்போது அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார். தற்கொலைக்கு முயன்றதாக இவர் மீது கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்ய உள்ளனர்.