sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திடீர் சாம்பார், திடீர் இட்லி போல் திடீர் கட்சிகள்: சசிகலா குறித்து தினகரன் விமர்சனம்

/

திடீர் சாம்பார், திடீர் இட்லி போல் திடீர் கட்சிகள்: சசிகலா குறித்து தினகரன் விமர்சனம்

திடீர் சாம்பார், திடீர் இட்லி போல் திடீர் கட்சிகள்: சசிகலா குறித்து தினகரன் விமர்சனம்

திடீர் சாம்பார், திடீர் இட்லி போல் திடீர் கட்சிகள்: சசிகலா குறித்து தினகரன் விமர்சனம்

6


ADDED : பிப் 24, 2026 10:08 PM

Google News

6

ADDED : பிப் 24, 2026 10:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: '' திடீர் சாம்பார், திடீர் இட்லிபோல் திடீர் கட்சிகள் வருகின்றன,'' என சசிகலா புதுக்கட்சி துவங்குவது குறித்து அமமுக பொதுச்செயலாளரும், அவரின் உறவினருமான தினகரன் விமர்சித்துள்ளார்.

புதுக்கட்சி


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாள் விழா, இன்று கொண்டாடப்பட்டது.இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில், சசிகலா சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அண்ணாதுரை எம்ஜிஆர், ஜெயலலிதா படத்துடன் கொடியை வெளியிட்ட சசிகலா, புதுக்கட்சி துவங்குவதாகவும், கட்சியின் பெயரை விரைவில் அறிமுகம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இபிஎஸ் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.

தடுக்க முடியாது


இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கூறியதாவது: அமமுக அதிமுகவின் 99.9 சதவீத தொண்டர்கள் ஓரணியில் இணைந்துவிட்டோம். சுதந்திர இந்தியாவில் ஜனநாயக நாட்டில் யாருடைய விருப்பம் எதுவேண்டுமானாலும் செய்யலாம். யாரும் எதுவும் தொடங்கலாம்.

திடீர் சாம்பார், திடீர் இட்லி மாதிரி சொல்கிறேன். திடீர் கட்சிகள் வரலாம். ஜெயலலிதா ஆட்சி அமைப்போம், கட்சியை ஒன்றிணைப்போம் என்று சொன்னவர்களின் சாயம் வெளுக்கும் நேரம் வந்துவிட்டது. 35 ஆண்டுகளாக எனக்கு தெரிந்த, எனக்கு மட்டுமே தெரிந்த சில நபர்களின் உண்மை சொரூபம் தமிழக மக்களுக்கு தெரியவந்து கொண்டிருக்கிறது.

சீப்பை ஒளித்துவைத்துவிட்டால், ஜெயலலிதாவின் ஆட்சி வருவதை யாராலும் தடுக்க முடியாது. 0.1 சதவீதத்தை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

திமுகவில் இருந்து எத்தனை பேர் பிரிந்து போனார்கள். அது பாதிப்பு உருவாக்குதா இல்லையா?அதுபோன்று எல்லா கட்சிகளையும் ஒரு சிலர் சிந்துவது, சிதறுவது, ஒரு சில பதர்களோ,நீங்கள் நெல்மணிகளாக நினைப்பீர்கள். அது பதர்களாக இருக்கலாம். பதர்களால் எந்த பாதிப்பும் இல்லை. பறவைகள் நெல்மணிகளை சிறிதளவு கொத்திச் செல்வதால் எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us