நீர்வரத்து கிடுகிடு உயர்வு: செம்பரம்பாக்கம் நீர்மட்டம் 13.38 அடி!
நீர்வரத்து கிடுகிடு உயர்வு: செம்பரம்பாக்கம் நீர்மட்டம் 13.38 அடி!
ADDED : அக் 15, 2024 07:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையின் முக்கிய நீர் ஆதாரமான, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து, தொடரும் கனமழையால் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுவது செம்பரம்பாக்கம் ஏரி. தமிழகத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான இந்த ஏரியில் அதிகபட்சம் 24 அடி வரை தண்ணீர் தேக்க முடியும்.
கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக இந்த ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலையில் 260 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 1080 கன அடியாக உயர்ந்துள்ளது.
ஏரியின் நீர்மட்டம் தற்போது 13.38 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் கனமழை இருக்கும் என்பதால் வரும் நாட்களிலும் ஏரிக்கு நீர் வரத்து இருக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.