ADDED : ஏப் 09, 2024 09:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களிலும் வெப்பம் வாட்டுவதால் பலரும் சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர்.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அறிவுரையில் கூறியிருப்பதாவது:
குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், வயது முதிர்ந்தோர், நோய்வாய் பட்டவர்கள் வெயிலில் செல்ல கூடாது.
வெயிலில் வெளியே செல்லும் நபர்கள், திறந்த வெளியில் வேலை செய்பவர்கள் போதிய அளவுக்கு குடிநீரை பருக வேண்டும். மேலும் ஓஆர்எஸ் எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருக வேண்டும்.
வயது முதிர்ந்தோர் வராதீர்கள் !
கர்ப்பிணி தாய்மார்கள், வயது முதிர்ந்தோர் வெயிலில் வெளியே போக வேண்டாம் என்றும் கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

