UPDATED : ஏப் 10, 2025 01:42 AM
ADDED : ஏப் 10, 2025 01:32 AM
விருதுநகர்:தமிழ்ப் புத்தாண்டு, கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை
கருத்தில் கொண்டு கோடை சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் -கன்னியாகுமரி
*
ஏப். 10 (இன்று), 17ல் இரவு 7:00 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து
புறப்படும் சிறப்பு ரயில் (06089) மறுநாள் காலை 10:00 மணிக்கு கன்னியாகுமரி
செல்லும். மறுமார்க்கம் ஏப். 11, 18ல் இரவு 8:00 மணிக்கு குமரியில்
இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06090) மறுநாள் காலை 11:00 மணிக்கு
சென்னை சென்ட்ரல் செல்லும்.
நாகர்கோவில், திருநெல்வேலி,
கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல்,
சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக செல்லும்.
12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படும்.
தாம்பரம்- - போத்தனுார்
ஏப்.
11, 18, 25, மே 2ல் மாலை 5:05 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்
சிறப்பு ரயில் (06185) மறுநாள் காலை 7:45 மணிக்கு போத்தனுார் செல்லும்.
மறுமார்க்கம் ஏப். 13, 20, 27, மே 4ல் இரவு 11:55 மணிக்கு போத்தனுாரில்
இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06186) மறுநாள் மதியம் 12:15 மணிக்கு
தாம்பரம் செல்லும்.
இவ்விரு ரயில்களும் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி,
உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம்,
மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம்,
திண்டிவனம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு வழியாக செல்லும்.
ஒரு
ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 3 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை
வசதிப் பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 2 பொதுப்
பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படும்.
மேற்கண்ட ரயில்களுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது.
ரயில் சேவை நீட்டிப்பு
ஞாயிறுதோறும்
இயக்கப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் ரயில் (06030) மே 4 வரை,
திங்கள் தோறும் இயக்கப்படும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ரயில் (06029)
மே 5 வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.