பாரத ஸ்டேட் வங்கியில் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு
பாரத ஸ்டேட் வங்கியில் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு
UPDATED : டிச 18, 2024 07:12 PM
ADDED : டிச 18, 2024 07:10 PM

சென்னை: பாரத ஸ்டேட் வங்கியில், கிளரிக்கல் கேடரில் ஜூனியர் அசோசியேட் பணியில் சேர பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
மொத்தம் 13,735 காலியிடங்கள் அறிவிப்பு; தமிழகத்தில் 336 இடங்கள், புதுச்சேரியில் 4 காலியிடங்கள் உள்ளன.
முதல் நிலைத்தேர்வு, பிரதான தேர்வு என இரு நிலைகளில் தேர்வு நடத்தப்படும்.
தமிழகத்தில் சென்னை, கோவை, கடலுார், ஈரோடு, கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, வேலுார், விருதுநகரிலும், புதுச்சேரியிலும் தேர்வு மையம் உண்டு.
விண்ணப்பிக்க கடைசி தேதி 2025 ஜன., 7
முதல்நிலை தேர்வு 2025- பிப்ரவரி மாதமும், பிரதான தேர்வு 2025-மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்,
//bank.sbi/web/careers/current-openings அல்லது // www.sbi.co.in/web/careers/current-openings என்ற வங்கியின் இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.