ADDED : செப் 28, 2025 06:41 AM

அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்கும் விவகாரம் தொடர்பாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். என்னுடைய குரலுக்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவு வந்துள்ளது. அதனால், கட்சி ஒருங்கிணைப்பு விஷயத்தில், விரைவில் அனைவரும் எதிர்பார்க்கும் நல்லது நடக்கும்.
நான் தெரிவிக்கும் கருத்துகளுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, இதுவரை எந்தக் கருத்தும் கூறவில்லை என்று என்னிடம் கேட்டால், அதற்கு என்னிடம் பதில் இல்லை. அவரிடம் தான், இது குறித்து கேட்க வேண்டும். என்னுடைய கருத்தில் இருந்து இன்றுவரை நான் மாறவில்லை.
நீலகிரி சென்ற பழனிசாமி, கோபி வழியாக சென்றபோது, அவரை சந்திக்காமல் சென்னை சென்றேன் என்று சொல்லும் தகவல் தவறு. சொந்தப் பணிகள் இருந்தது, சென்னைக்குச் சென்றேன். யாரையும் எதற்காகவும் நான் புறக்கணிக்க மாட்டேன்.
- செங்கோட்டையன்,
முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,