UPDATED : பிப் 19, 2024 04:50 AM
ADDED : பிப் 19, 2024 04:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : 'மத்தியில் 10 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை தந்துள்ள பா.ஜ.,வை முழுமையாக ஆதரிக்கிறோம்' என ஓ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
மதுரையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கூறியதாவது: லோக்சபா தேர்தல் கூட்டணிக்கான பேச்சு தொடர்ந்து நடக்கிறது. தேர்தலையொட்டி பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.,வினர் ஒன்றிணையவேண்டும் என்பதே என் விருப்பம். சசிகலா - தினகரன் - ஓ.பி.எஸ்.,கூட்டணியாக ஒன்றிணைய வேண்டும்.
பா.ஜ.,வை முழுமையாக ஆதரிக்கிறோம். மத்தியில் 10 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை தந்துள்ளதால் அக்கட்சிக்கு ஆதரவு தருவதில் மாற்றுக் கருத்து இல்லை. பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க., சக்திகள் ஒன்றிணைந்தால் தான்தேர்தலில் வெற்றி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

