உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 16, 2026 10:27 PM
ADDED : நவ 16, 2026 10:24 PM
அ நிறம் | அளவு
துாத்துக்குடி: கீரிப்பிள்ளையை வேட்டையாடிய இருவரை, வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
துாத்துக்குடி போல்பேட்டை பகுதியில் சிலர், கீரிப்பிள்ளையை வேட்டையாடி வைத்திருப்பதாக மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
வனச்சரக அலுவலர் பாபு தலைமையிலான குழுவினர் அங்கு சென்று சோதனை செய்தனர். போல்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராம்குமார், 27, ஆனந்த், 28, ஆகியோர், கீரிப்பிள்ளையை வேட்டையாடி கொன்றது தெரிந்தது.
வனஉயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், அவர்கள் இருவரையும் கைது செய்த வனத்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட கூண்டுகள், பைக் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
