உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 13, 2026 07:07 PM
அ நிறம் | அளவு
பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே, காட்டு பன்றியை வேட்டையாடிய தொழிலாளி முரளி, 40, என்பவர் கைது செய்யப்பட்டார்.
வேலுார் மாவட்டம், குண்டலப்பள்ளி காப்புக்காடு பகுதியில் வனவிலங்குகள் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. நேற்று (நவ.,12), சேம்பள்ளி வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
சந்தேகத்திற்கிடமாக டூ – வீலரில் சென்ற நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், எர்த்தாங்கலைச் சேர்ந்த ‘டைல்ஸ்’ ஒட்டும் தொழிலாளி முரளி என தெரியவந்தது. மேலும் அவர், வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடியதும் தெரியவந்தது.
முரளியை கைது செய்த வனத்துறையினர், 28 நாட்டு வெடிகுண்டுகள், 2 கிலோ காட்டு பன்றி இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
