sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வாயில் சுருட்டு உடன் சூர்யா... சமூக அக்கறை இது தானா: ரசிகர்கள் அதிர்ச்சி

/

வாயில் சுருட்டு உடன் சூர்யா... சமூக அக்கறை இது தானா: ரசிகர்கள் அதிர்ச்சி

வாயில் சுருட்டு உடன் சூர்யா... சமூக அக்கறை இது தானா: ரசிகர்கள் அதிர்ச்சி

வாயில் சுருட்டு உடன் சூர்யா... சமூக அக்கறை இது தானா: ரசிகர்கள் அதிர்ச்சி

23


ADDED : ஜூலை 23, 2025 11:04 AM

Google News

23

ADDED : ஜூலை 23, 2025 11:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையமைப்பில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் 'கருப்பு'. இன்று (ஜூலை 23) சூர்யாவின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதற்காக நேற்று இரவு படத்தின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டார்கள். அதில் 'சுருட்டு' பிடித்துக் கொண்டு சூர்யா நடக்க, சுற்றிலும் கிராமத்து தெய்வங்களின் தோற்றத்தில் கையில் அரிவாளுடன் சிலர் நின்றிருக்கும் வகையில் போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை கிராமத்துத் தெய்வங்களின் கதைக்களமாகக் கொண்டு உருவாக்கி வருவதாகச் சொல்கிறார்கள்.

சினிமாவில் அதிகமான புகை பிடிக்கும் காட்சிகளில் நடித்த ரஜினிகாந்த் கூட இப்போதெல்லாம் அம்மாதிரியான காட்சிகளில் நடிப்பதைத் தவிர்த்துவிட்டார். இடையில் 'ஜெயிலர்' படத்தில் அப்படி ஒரு காட்சி வந்ததற்கும் எதிர்ப்பு கிளம்பியது. விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' படத்தில் 'நான் ரெடிதான்' பாடலில் விஜய் புகை பிடித்தபடியே நடனமாடியதும், பாடலில் மது அருந்துவது குறித்த வரிகள் இடம் பெற்றதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. தனுஷும் அவரது பட போஸ்டர்களில் புகை பிடிப்பதை வைத்து வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.



ஆனால் சூர்யா கதை வேறு. இவர் எப்போதும் தன்னை சமூக அக்கறை கொண்ட ஒருவராக காட்டிக் கொள்பவர். அவரது மனைவி ஜோதிகா சில வருடங்களுக்கு முன்பு கோவில்களையும், மருத்துவமனைகளையும் ஒப்பிட்டுப் பேசியதும் சர்ச்சை ஆனது. அதன்பின் சூர்யா, ஜோதிகா தங்களது பக்தியை வெளிப்படுத்தும் விதமாக சிலவற்றைச் செய்தார்கள்.

பிறந்தநாள் அதுவுமாக, குறிப்பாக 50வது பிறந்தநாளில் 'சுருட்டு' பிடிக்கும் போஸ்டர் ஒன்று வெளியாகப் போகிறது என்பது சூர்யாவுக்குத் தெரியாமல் இருக்காது. அப்படி ஒரு போஸ்டரை அவர் வெளியிட அனுமதித்தது ஏன் என்று சமூக வலைத்தளங்களில் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்படியான போஸ்டர்களுக்கு எதிர்ப்பைப் பதிவு செய்யும் பாமக அன்புமணி ராமதாஸ் கூட அமைதியாக இருக்கிறாரே என ரசிகர்கள் கேட்கிறார்கள்.

சில நடிகர்கள் இப்படி சர்ச்சை வரும் விதத்தில் வேண்டுமென்றே புகைப்பது, குடிப்பது போன்றவற்றை தங்கள் பட 'புரமோஷனுக்கு' பயன்படுத்துவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

சமூகத்தின் மீது உண்மையான அக்கறை இருந்தால் இந்த 'சுருட்டு' போஸ்டரை உடனடியாக நீக்கச் சொல்வாரா சூர்யா ?, அதோடு அப்படி ஒரு போஸ்டர் வெளியானதற்கு வருத்தம் தெரிவிப்பாரா ?. அல்லது, படத்தின் கதைப்படி, காட்சிப்படி அது தேவையானதாக உள்ளது என்று சமாளிப்பாரா ?.






      Dinamalar
      Follow us