sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கேரளாவுக்கு பயணிக்கும் ஆழியாறு ஆற்றில் உபரிநீர் வீணாகுதே!

/

கேரளாவுக்கு பயணிக்கும் ஆழியாறு ஆற்றில் உபரிநீர் வீணாகுதே!

கேரளாவுக்கு பயணிக்கும் ஆழியாறு ஆற்றில் உபரிநீர் வீணாகுதே!

கேரளாவுக்கு பயணிக்கும் ஆழியாறு ஆற்றில் உபரிநீர் வீணாகுதே!


UPDATED : செப் 23, 2024 08:59 AM

ADDED : செப் 22, 2024 11:47 PM

Google News

UPDATED : செப் 23, 2024 08:59 AM ADDED : செப் 22, 2024 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : ஆழியாறு அணை நிரம்பியதும், வீணாக கடலில் கலக்கும் உபரிநீரை சேமிக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதற்குரிய நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.

பி.ஏ.பி., பாசனத்தில், முக்கிய அணையாக உள்ளது ஆழியாறு. 76 சதுர மைல்களை நீர்ப்பிடிப்பு பரப்பாக கொண்டுள்ள இந்த நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவு, 3,864 மில்லியன் கனஅடியாகும்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில், பாசன வசதி, குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடந்த 1962ம் ஆண்டு கட்டப்பட்டது. 120அடி உயரத்துக்கு நீர் தேக்க முடியும்.

பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள, 6,400 ஏக்கர்; புதிய ஆயக்கட்டு பாசனத்தில், 42 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஆழியாறு ஆறு வாயிலாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு கால்வாய் வழியாகவும் தண்ணீர் வழங்கப்படுகிறது.

மேலும், ஆண்டிற்கு 7.25 டி.எம்.சி., தண்ணீர் ஆழியாறில் இருந்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் கேரள மாநிலத்துக்கு வழங்கப்படுகிறது.

மணக்கடவு சிற்றணை


ஆழியாறு ஆற்றிலிருந்து, 50 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது மணக்கடவு சிற்றணை. இங்கிருந்து தான், கேரளாவுக்கு வழங்க வேண்டிய தண்ணீர் பங்கீட்டு வழங்க வேண்டும். இந்த சிற்றணையில் தேங்கி பின், கோபாலபுரம் அடுத்த தமிழக - கேரள எல்லையில் உள்ள மூலத்தரா அணை வழியாக கேரளாவிற்கு செல்கிறது.

ஆண்டுதோறும் அணை முழு கொள்ளவான 120 அடியில், 119 அல்லது 119.80 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்ததும், அணை பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

உபரிநீர், ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளுக்கு திருப்பி விடப்பட்டாலும், அதிகளவு நீர், மணக்கடவு வழியாக மூலத்தாரா அணைக்கு செல்கிறது.

ஆழியாறு அணையிலிருந்து கேரளாவிற்கு வழங்க வேண்டிய தண்ணீர் முறையாக வழங்கப்படும் நிலையில், மழைக் காலங்களில், அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் சேமிக்க முடியாமல், இவ்வழியாக சென்று, அரபிக்கடலில் கலக்கிறது. இதனால், இரு மாநிலத்துக்கும் பலனில்லை.

வீணாகும் தண்ணீர் சேமிக்க முடியாததால், மழைக்காலங்களில் அதிகளவு தண்ணீர் கடலில் கலப்பது தவிர்க்க இயலாத நிலை உள்ளது. நடப்பாண்டும் இதே நிலை நீடித்தது. இதனால், கோடை காலங்களில், விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்காத சூழல் உள்ளது.

தடுப்பணை கட்டலாம்


மழை காலங்களில் அணை நிரம்பி, தண்ணீர் வீணாக அரபிக்கடலில் கலக்கிறது. இதற்கு மாற்றாக தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில், ஆற்று வழித்தடத்தில் தடுப்பணை கட்டலாம் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆழியாறு அணையிலிருந்து மணக்கடவுக்கு 50 கி.மீ., துாரம் பயணித்து தண்ணீர் செல்கிறது. இடைப்பட்ட பகுதிகளான அம்பராம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமிக்கவோ அல்லது பராமரிப்பில்லாத தடுப்பணைகள் சீரமைக்க நடவடிக்கை எடுத்தால் நீரை சேமிக்கலாம்.

அதன் வாயிலாக, கேரளாவுக்கு வழங்க வேண்டிய தண்ணீர் மாதந்தோறும் வழங்கலாம்; உபரி நீரும் வீணாக கடலில் கலப்பது தடுக்க முடியும்.

எனவே, தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

செயல்படுத்துங்க!


பல ஆண்டுகளுக்கு முன், ஆழியாறு, கோட்டூர், ஆனைமலை, அம்பராம்பாளையம், ஆத்துப்பொள்ளாச்சி என ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தடுப்பணை கட்டலாம் என முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்தால், தண்ணீர் வீணாவதை தடுப்பதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

இதற்கு, நீர்வளத்துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தினால் பயனாக இருக்கும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.






      Dinamalar
      Follow us